caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 57

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:57

وَهُوَ ٱلَّذِى يُرْسِلُ ٱلرِّيَٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهِۦ حَتَّىٰٓ إِذَآ أَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَأَنزَلْنَا بِهِ ٱلْمَآءَ فَأَخْرَجْنَا بِهِۦ مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ كَذَٰلِكَ نُخْرِجُ ٱلْمَوْتَىٰ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் தனது (மழை எனும்) கருணைக்கு முன்னர் நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்புகிறான். இறுதியாக, அது கனமேகத்தைச் சுமந்தால் அதை (வறண்டு) இறந்(து கிடந்)த பூமியின் பக்கம் ஓட்டுகிறோம். அதிலிருந்து மழையை இறக்குகிறோம். அதன் மூலம் எல்லா கனிகளிலிருந்தும் (குறிப்பிட்ட அளவை) வெளியாக்குகிறோம். இவ்வாறே, மரணித்தவர்களையும் வெளியாக்குவோம். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக (உங்களுக்கு இவற்றை விவரிக்கிறோம்)!
Tamil Translation - Omar Sharifஅவன்தான் தனது (மழை எனும்) கருணைக்கு முன்னர் நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்புகிறான். இறுதியாக, அது கனமான கார்மேகத்தைச் சுமந்தால், (வறண்டு) இறந்(து கிடந்)த பூமியின் பக்கம் அதை நாம் ஓட்டிவருகிறோம். இன்னும் அதிலிருந்து மழையை இறக்குகிறோம். ஆக, அதன் மூலம் எல்லா கனிகளிலிருந்தும் (குறிப்பிட்ட அளவை உங்களுக்காக) வெளியாக்குகிறோம். இவ்வாறே, மரணித்தவர்களையும் (உயிர் கொடுத்து பூமியிலிருந்து) வெளியாக்குவோம். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக (உங்களுக்கு இவற்றை விவரிக்கிறோம்)!
Tamil Translation - Abdulhamid Baqawi57. அவன்தான் அவனுடைய அருள்மழைக்கு (முன்னர்) நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பிவைக்கிறான். அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்த பின்னர், அதை (வரண்டு) இறந்து விட்ட பூமியின் பக்கம் நாம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழை பெய்யச் செய்கிறோம். பின்னர், அதைக் கொண்டு எல்லா வகைக் கனிகளையும் வெளியாக்குகிறோம். இவ்வாறே, மரணித்தவர்களையும் (அவர்களின் சமாதிகளிலிருந்து) வெளியாக்குவோம். (இதை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70