caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 56

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:56

وَلَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ بَعْدَ إِصْلَٰحِهَا وَٱدْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَتَ ٱللَّهِ قَرِيبٌ مِّنَ ٱلْمُحْسِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமியில் அது சீர்திருத்தப்பட்(டு சமாதானம் ஏற்பட்)டப் பின்னர் கலகம் செய்யாதீர்கள். பயத்துடனும், ஆசையுடனும் அவனை அழையுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் கருணை நல்லறம் புரிவோருக்கு சமீபமானது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பூமியில் அது சீர்திருத்தப்பட்(டு அதில் சமாதானம் ஏற்பட்)ட பின்னர் கலகம் (-குழப்பம், விஷமம்) செய்யாதீர்கள். இன்னும், பயத்துடனும், ஆசையுடனும் அவனை அழைத்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் கருணை நல்லறம் புரிவோருக்கு மிக சமீபமானதாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi56. (மனிதர்களே! சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) நாடு சீர்திருந்திய பின்னர் அதில் விஷமம் செய்யாதீர்கள். (இறைவனுடைய தண்டனைக்கு) பயந்தும், (அவனுடைய சன்மானத்தை) விரும்பியும், அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70