caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 58

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:58

وَٱلْبَلَدُ ٱلطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهُۥ بِإِذْنِ رَبِّهِۦ وَٱلَّذِى خَبُثَ لَا يَخْرُجُ إِلَّا نَكِدًا كَذَٰلِكَ نُصَرِّفُ ٱلْـَٔايَٰتِ لِقَوْمٍ يَشْكُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநல்ல பூமி அதன் தாவரம் தன் இறைவனின் அனுமதி கொண்டு (அதிகமாக) வெளியாகிறது. எது கெட்டுவிட்ட (பூமியாக உள்ள)தோ (அதிலிருந்து) வெகு சொற்பமாகவே தவிர (தாவரங்கள்) வெளியாகாது. நன்றி செலுத்துகிற மக்களுக்கு இவ்வாறு வசனங்களை விவரிக்கிறோம்.
Tamil Translation - Omar Sharifநல்ல பூமி, - அதனுடைய தாவரம் அதன் இறைவனின் அனுமதியினால் (அதிகமாக) உற்பத்தியாகிறது. இன்னும் எது கெட்டுவிட்ட (பூமியாக உள்ள)தோ (அதிலிருந்து) வெகு சொற்பமாகவே தவிர (தாவரங்கள்) உற்பத்தியாகாது. நன்றி செலுத்துகிற மக்களுக்கு இவ்வாறு வசனங்களை நாம் விவரிக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi58. (ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. எனினும், கெட்ட (வளமற்ற) பூமியிலோ வெகு சொற்பமாகவே தவிர முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பல வகைகளிலும் (நம்) வசனங்களை விவரிக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70