caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 164

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:164

وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا ٱللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا۟ مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் ஒரு கூட்டம் “அல்லாஹ் அவர்களை அழிப்பவனாக அல்லது கடுமையான வேதனையால் அவர்களை வேதனை செய்பவனாக உள்ள மக்களுக்கு (நீங்கள்) ஏன் உபதேசிக்கிறீர்கள்?” என்று கூறியபோது, “உங்கள் இறைவனிடம் புகல் கூறுவதற்காகவும், அவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும் (அதிலிருந்து விலகுவதற்காகவும் அவர்களுக்கு உபதேசிக்கிறோம்)” என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “அல்லாஹ் அவர்களை அழிப்பவனாக அல்லது கடுமையான தண்டனையால் அவர்களை தண்டிப்பவனாக உள்ள மக்களுக்கு (நீங்கள்) ஏன் உபதேசிக்கிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு கூட்டம் கூறியபோது, “உங்கள் இறைவனிடம் (எங்கள்) நியாயத்தை கூறுவதற்காகவும், அவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும் (அதிலிருந்து விலகுவதற்காகவும் அவர்களுக்கு உபதேசிக்கிறோம்)” என்று கூறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi164. (இதை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதைக் கண்ட வேறு) ஒரு கூட்டத்தினர் (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எவர்களை அழித்துவிட வேண்டுமென்றோ, கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ நாடியிருக்கிறானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கவர்கள் ‘‘இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கிறோம் என்றும், இதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம்'' என்றும் பதில் கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70