caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 165

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:165

فَلَمَّا نَسُوا۟ مَا ذُكِّرُوا۟ بِهِۦٓ أَنجَيْنَا ٱلَّذِينَ يَنْهَوْنَ عَنِ ٱلسُّوٓءِ وَأَخَذْنَا ٱلَّذِينَ ظَلَمُوا۟ بِعَذَابٍۭ بَـِٔيسٍۭ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (தங்களுக்கு) நினைவூட்டப்பட்டதை மறந்தபோது தீமையை விட்டுத் தடுத்தவர்களைப் பாதுகாத்தோம். அநீதியிழைத்தவர்களை -அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால்- கடுமையான வேதனையால் பிடித்தோம்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் (தங்களுக்கு) உபதேசிக்கப்பட்டதை மறந்தபோது தீமையை விட்டும் (மக்களை) தடுத்தவர்களைப் பாதுகாத்தோம். இன்னும், பாவம் செய்தவர்களை - அவர்கள் (அல்லாஹ்வின்) கட்டளையை மீறுபவர்களாக இருந்த காரணத்தால் - கடுமையான தண்டனையால் பிடித்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi165. அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (தொடர்ந்து மீன் பிடிக்க முற்பட்டு)விடவே, பாவத்திலிருந்து விலக்கி வந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டு வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70