وَٱكْتُبْ لَنَا فِى هَٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةً وَفِى ٱلْـَٔاخِرَةِ إِنَّا هُدْنَآ إِلَيْكَ قَالَ عَذَابِىٓ أُصِيبُ بِهِۦ مَنْ أَشَآءُ وَرَحْمَتِى وَسِعَتْ كُلَّ شَىْءٍ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِنَا يُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு அழகியதை விதிப்பாயாக! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே திரும்பினோம்” (என்றும் மூஸா கூறினார்). “என் வேதனை அதைக் கொண்டு நான் நாடியவர்களை அடைவேன். என் கருணை எல்லாவற்றையும் விசாலமாக்கி விட்டது. ஆகவே, அதை (என்னை) அஞ்சி, ஸகாத்தைக் கொடுப்பவர்களுக்கும், நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களுக்கும் விதிப்பேன்” என்று (இறைவன்) கூறினான். (இம்மையில் ஹசனா என்பது நற்செயல்களையும் மறுமையில் ஹசனா என்பது இறைமன்னிப்பையும் குறிக்கும்)
Tamil Translation - Omar Sharif“இன்னும், இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு அழகியதை[1] விதிப்பாயாக! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே திரும்பினோம்” (அல்லாஹ்) கூறினான்: “என் தண்டனை அதன் மூலம் நான் நாடியவர்களை பிடிப்பேன். இன்னும், என் கருணை ஒவ்வொரு பொருளுக்கும் விசாலமாக இருக்கிறது. ஆக, எவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சுகிறார்களோ; இன்னும், ஸகாத்தைக் கொடுப்பார்களோ; இன்னும், எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கு அதை விதிப்பேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi156. மேலும், ‘‘(இறைவனே!) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையை முடிவு செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும் (செய்வாயாக)! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே முன்னோக்கினோம்'' (என்றும் பிரார்த்தித்தார்). அ(தற்கு இறை)வன் ‘‘நான் நாடியவர்களை என் வேதனை வந்தடையும். எனினும், என் அருட்கொடை அனைத்தையும்விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என் அருளை) நான் முடிவு செய்வேன்'' என்று கூறினான்.