caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Talaaq அத்தியாயம், வசனம் 11

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 99 · 65:11

رَّسُولًا يَتْلُوا۟ عَلَيْكُمْ ءَايَٰتِ ٱللَّهِ مُبَيِّنَٰتٍ لِّيُخْرِجَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَمَن يُؤْمِنۢ بِٱللَّهِ وَيَعْمَلْ صَٰلِحًا يُدْخِلْهُ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا قَدْ أَحْسَنَ ٱللَّهُ لَهُۥ رِزْقًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இன்னும்) ஒரு தூதரை (அனுப்பி இருக்கின்றான்). அவர் உங்களுக்கு அல்லாஹ்வின் தெளிவான வசனங்களை ஓதிக் காண்பிக்கிறார். ஏனெனில், நம்பிக்கை கொண்டு, நன்மைகள் செய்தவர்களை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் அவன் வெளியேற்றுவதற்காக (தூதரை அனுப்பினான்). எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, நன்மையை செய்வார்களோ அவர்களை அவன் சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் எப்போதும் நிரந்தரமாகத் தங்குவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு (அங்கு) வாழ்வாதாரத்தை (உணவு, குடிபானம், இன்னும் எல்லாத் தேவைகளையும்) மிக அழகாக (விசாலமாக, நெருக்கடியின்றி) வைத்திருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharif(இன்னும்) ஒரு தூதரை அனுப்பி இருக்கிறான். அவர் உங்களுக்கு அல்லாஹ்வின் தெளிவான வசனங்களை ஓதிக் காண்பிக்கிறார். ஏனெனில், நம்பிக்கை கொண்டு, நன்மைகள் செய்தவர்களை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் அவன் வெளியேற்றுவதற்காக (தூதரை அனுப்பினான்). எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, நன்மையை செய்வார்களோ அவர்களை அவன் சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் எப்போதும் நிரந்தரமாகத் தங்குவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு (அங்கு) வாழ்வாதாரத்தை (உணவு, குடிபானம், இன்னும் எல்லாத் தேவைகளையும்) மிக அழகாக (விசாலமாக, குறைவின்றி, முடிவில்லாமல்) ஆக்கி வைத்திருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. (மேலும்), ஒரு தூதரையும் (அனுப்பி வைத்திருக்கிறான்). அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்து, (உங்களில்) நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்பவர்களை, இருள்களில் இருந்து பிரகாசத்தின் பக்கம் கொண்டு வருகிறார். ஆகவே, (உங்களில்) எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களை சொர்க்கங்களில் புகச்செய்வான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அழகான அருளே புரிவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70