caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Talaaq அத்தியாயம், வசனம் 12

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 99 · 65:12

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ سَبْعَ سَمَٰوَٰتٍ وَمِنَ ٱلْأَرْضِ مِثْلَهُنَّ يَتَنَزَّلُ ٱلْأَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ وَأَنَّ ٱللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًۢا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்தான் ஏழு வானங்களையும் படைத்தான். இன்னும் பூமியில் அவற்றைப் போன்று (-ஏழு பூமிகளை) படைத்தான். அவற்றுக்கு மத்தியில் (அவனுடைய) கட்டளைகள் இறங்குகின்றன. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிவால் சூழ்ந்துள்ளான் என்பதை நீங்கள் அறிவதற்காக (இவற்றை அவன் உங்களுக்கு விவரிக்கின்றான்).
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்தான் ஏழு வானங்களை படைத்தான். இன்னும், பூமியில் அவற்றைப் போன்று (-ஏழு பூமிகளை) படைத்தான். அவற்றுக்கு மத்தியில் (அவனுடைய) கட்டளைகள் இறங்குகின்றன. “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிவு ஞானத்தால் சூழ்ந்துள்ளான்” என்பதை நீங்கள் அறிவதற்காக (இவற்றை அவன் உங்களுக்கு விவரிக்கிறான்).
Tamil Translation - Abdulhamid Baqawi12. ஏழு வானங்களையும், அவற்றைப்போல் பூமியையும் அல்லாஹ்தான் படைத்தான். இவற்றில் (தினசரி நிகழக்கூடிய) எல்லா விஷயங்களைப் பற்றிய கட்டளை இறங்கிக்கொண்டே இருக்கிறது. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக அல்லாஹ் சகலவற்றின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால், எல்லாவற்றையும் ஆழமாக அறிந்துகொண்டிருக்கிறான் என்பதையும் நீங்கள் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவற்றைப் படைத்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70