وَهُوَ ٱلَّذِىٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجْنَا بِهِۦ نَبَاتَ كُلِّ شَىْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا وَمِنَ ٱلنَّخْلِ مِن طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّٰتٍ مِّنْ أَعْنَابٍ وَٱلزَّيْتُونَ وَٱلرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَٰبِهٍ ٱنظُرُوٓا۟ إِلَىٰ ثَمَرِهِۦٓ إِذَآ أَثْمَرَ وَيَنْعِهِۦٓ إِنَّ فِى ذَٰلِكُمْ لَـَٔايَٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்குபவன். அதன் மூலம் எல்லா தாவரங்களையும் வெளியாக்கினோம். (அவ்வாறே) அதிலிருந்து பசுமையானதையும் வெளியாக்கினோம். அதிலிருந்து அடர்ந்த வித்துக்களை (உடைய கதிர்களை)யும் வெளியாக்குகிறோம். பேரீச்ச மரத்தில் அதன் பாளையிலிருந்து (பறிக்க) நெருக்கமான பழக்குலைகளும் இருக்கின்றன. திராட்சைகளின் தோட்டங்களையும், (ஒலிவம்) ஸய்த்தூனையும், (பார்வையில்) ஒப்பான, (ருசியில்) ஒப்பாகாத மாதுளையையும் (நாமே வெளியாக்குகிறோம்). அவை காய்க்கும்போது அதன் கனிகளையும் அவை பழமாகுவதையும் பாருங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்குபவன். அதன் மூலம் எல்லா தாவரங்களையும் நாம் உற்பத்தி செய்தோம். (அவ்வாறே) அதிலிருந்து பசுமையானதையும் உற்பத்தி செய்தோம். அதிலிருந்து அடர்ந்த வித்துக்களை (உடைய கதிர்களை)யும் உற்பத்தி செய்கிறோம். பேரீச்ச மரத்தில் அதன் பாளையிலிருந்து (பறிப்பதற்கு) நெருக்கமான பழக்குலைகளும் இருக்கின்றன. திராட்சைகளின் தோட்டங்களையும், (ஒலிவம்) ஆலிவ் பழங்களையும், (பார்வையில்) ஒப்பான, (ருசியில்) ஒப்பாகாத மாதுளைகளையும் (நாமே வெளியாக்குகிறோம்). அவை காய்க்கும்போது அதன் கனிகளையும் இன்னும், அவை பழமாகுவதையும் கவனித்துப் பாருங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tamil Translation - Abdulhamid Baqawi99. அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்கிவைக்கிறான். அதைக் கொண்டே சகல வகைப் புற்பூண்டுகளையும் நாம் முளைக்க வைத்து, அதில் இருந்து பசுமையான தழைகளையும் நாம் வெளியாக்குகிறோம். அதிலிருந்தே அடர்ந்த வித்துக்களை(யுடைய கதிர்களை)யும் நாம் வெளியாக்குகிறோம். பேரீச்ச மரத்தின் பாளைகளில் வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. (அவற்றையும் நாமே வெளியாக்குகிறோம்.) திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் (ரசனையில்) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜெய்த்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாமே வெளியாக்குகிறோம்). அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் (மக்களே!) உற்று நோக்குங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.