وَجَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ ٱلْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوا۟ لَهُۥ بَنِينَ وَبَنَٰتٍۭ بِغَيْرِ عِلْمٍ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يَصِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக ஆக்கினர், அவன் அவர்களைப் படைத்திருக்க. இன்னும் அறிவின்றி அவனுக்கு மகன்களையும், மகள்களையும் கற்பனை செய்தனர். அவன் மகா தூயவன். அவர்கள் (தகுதியின்றி) வர்ணிப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் ஜின்களை அல்லாஹ்விற்கு இணையான தெய்வங்களாக ஆக்கினர். அவனோ அவர்களைப் படைத்திருக்கிறான். இன்னும், அறிவின்றி அவனுக்கு மகன்களையும், மகள்களையும் கற்பனை செய்தனர். அவன் (இந்த கற்பனைகளை விட்டு) மகாத் தூயவன். இன்னும் அ(ந்த இணைவைப்ப)வர்கள் வருணிப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi100. (இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் ஜின்களில் பலரை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். எனினும், அந்த ஜின்களையும் அவனே படைத்திருக்கிறான். இவர்கள் (தங்கள்) அறிவீனத்தால் அல்லாஹ்வுக்கு ஆண், பெண் சந்ததிகளையும் கற்பிக்கின்றனர். அவனோ, இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவற்றில் இருந்து மிக்க பரிசுத்தமானவனாகவும் உயர்ந்தவனாகவும் இருக்கிறான்.