وَهُوَ ٱلَّذِىٓ أَنشَأَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَمُسْتَوْدَعٌ قَدْ فَصَّلْنَا ٱلْـَٔايَٰتِ لِقَوْمٍ يَفْقَهُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் உங்களை ஒரே ஓர் ஆத்மாவில் இருந்து உருவாக்கினான். ஆகவே, ஒரு தங்குமிடமும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும் உண்டு. விளங்கிக்கொள்கின்ற சமுதாயத்திற்கு அத்தாட்சிகளை விவரித்து விட்டோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன்தான் உங்களை ஒரே ஓர் ஆத்மாவில் இருந்து உருவாக்கினான். ஆக, (ஒவ்வொரு ஆன்மாவிற்கும்) ஒரு தங்குமிடமும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும் உண்டு. சிந்தித்து புரிகின்ற சமுதாயத்திற்காக அத்தாட்சிகளை திட்டமாக விவரித்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi98. (மனிதர்களே!) உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்து பின்னர் (உங்கள் தந்தையிடம்) தரித்திருக்கச் செய்து (உங்கள் தாயின் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே! சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்தோம்.