caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 60

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:60

وَهُوَ ٱلَّذِى يَتَوَفَّىٰكُم بِٱلَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُم بِٱلنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ لِيُقْضَىٰٓ أَجَلٌ مُّسَمًّى ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவில் அவன்தான் உங்க(ள் உயிர்க)ளை கைப்பற்றுகிறான். நீங்கள் பகலில் செய்தவற்றை அறிகிறான். பிறகு, குறிப்பிட்ட தவணை (முழுமையாக) முடிக்கப்படுவதற்காக அதில் உங்களை எழுப்புகிறான். பிறகு, அவன் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. பிறகு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இரவில் அவன்தான் உங்க(ள் உயிர்க)ளை கைப்பற்றுகிறான். இன்னும், நீங்கள் பகலில் செய்தவற்றை அவன் அறிகிறான். பிறகு, குறிப்பிட்ட தவணை (முழுமையாக) முடிக்கப்படுவதற்காக அதில் (-காலையில்) உங்களை அவன் எழுப்புகிறான். பிறகு, அவன் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. பிறகு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi60. (மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும் பொழுது) அவன்தான் (உங்கள் உணர்ச்சியை நீக்கி) உங்களை இறந்தவர்களுக்குச் சமமாக்குகிறான். நீங்கள் பகலில் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான். (உங்களுக்குக்) குறிப்பிட்ட காலம் பூர்த்தி ஆவதற்காக இதற்குப் பின்னர் (உணர்ச்சியை உண்டு பண்ணி) உங்களை எழுப்புகிறான். பின்னர், நீங்கள் அவனிடம்தான் திரும்பப்போவீர்கள். நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவற்றை (அங்கு) உங்களுக்கு அவன் அறிவிப்பான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70