وَهُوَ ٱلْقَاهِرُ فَوْقَ عِبَادِهِۦ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் தன் அடியார்கள் மேல் ஆதிக்கமுள்ளவன். உங்கள் மீது (வானவ) காவலர்களையும் அனுப்புகிறான். இறுதியாக, உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், நம் (வானவத்) தூதர்கள் அவரை (அவருடைய உயிரை) கைப்பற்றுகின்றனர். அவர்கள் (தங்கள் பணியில்) குறைவு செய்யமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் தன் அடியார்கள் மேல் ஆதிக்கமுள்ளவன். இன்னும், உங்கள் மீது (வானவ) காவலர்களையும் அவன் அனுப்புகிறான். இறுதியாக, உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், நம் (வானவத்) தூதர்கள் அவ(ருடைய உயி)ரை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (தங்கள் பணியில்) குறைவு செய்யமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi61. அவன் தன் அடியார்களை அடக்கி ஆளுகிறான்; மேலும், உங்களுக்குப் பாதுகாவலர்களையும் ஏற்படுத்துகிறான். (மரண நேரம் வரும்வரை அவர்கள் உங்களை பாதுகாக்கின்றனர்,) பின்னர், உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால் நமது (வானவத்) தூதர்கள் அவரை உயிர் வாங்குகின்றனர். அவர்கள் (குறித்த காலத்திற்கு முன்னரோ, பின்னரோ உயிரைக் கைப்பற்றி) ஏதும் தவறிழைப்பதில்லை.