فَقَدْ كَذَّبُوا۟ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَسَوْفَ يَأْتِيهِمْ أَنۢبَٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, சத்தியத்தை -அது அவர்களிடம் வந்தபோது- பொய்ப்பித்தனர். அவர்கள் எதை பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ அதன் (உண்மை) செய்திகள் அவர்களிடம் வரும்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் சத்தியத்தை, - அது அவர்களிடம் வந்தபோது - பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் எதை கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதன் (உண்மை) செய்திகள் அவர்களிடம் விரைவில் வரும்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. ஆகவே, அவர்களிடம் வந்திருக்கும் இந்த சத்திய (வேத)த்தையும் அவர்கள் பொய்யாக்குகின்றனர். ஆனால், எவ்விஷயங்கள் பற்றி (அவை பொய்யானவை என) அவர்கள் பரிகசித்து கொண்டிருக்கின்றனரோ அவை (உண்மையாகவே) அவர்களிடம் வந்தே தீரும்.