caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 6

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:6

أَلَمْ يَرَوْا۟ كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍ مَّكَّنَّٰهُمْ فِى ٱلْأَرْضِ مَا لَمْ نُمَكِّن لَّكُمْ وَأَرْسَلْنَا ٱلسَّمَآءَ عَلَيْهِم مِّدْرَارًا وَجَعَلْنَا ٱلْأَنْهَٰرَ تَجْرِى مِن تَحْتِهِمْ فَأَهْلَكْنَٰهُم بِذُنُوبِهِمْ وَأَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قَرْنًا ءَاخَرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு முன்னர் எத்தனையோ சமுதாயத்தை அழித்தோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் வசதியளிக்காத அளவு அவர்களுக்கு வசதி அளித்தோம்; அவர்கள் மீது தாரை தாரையாக மழையை அனுப்பினோம்; நதிகளை அவர்களுக்குக் கீழ் ஓடும்படி ஆக்கினோம். ஆகவே, அவர்களுடைய பாவங்களினால் அவர்களை அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் மற்ற சமுதாயத்தை ஏற்படுத்தினோம்.
Tamil Translation - Omar Sharifஅவர்களுக்கு முன்னர் எத்தனையோ சமுதாயத்தை நாம் அழித்தோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் வசதியளிக்காத அளவு அவர்களுக்கு வசதி அளித்தோம்; இன்னும், அவர்கள் மீது தாரை தாரையாக மழையை அனுப்பினோம்; இன்னும், நதிகளை அவர்களுக்குக் கீழ் ஓடும்படி ஆக்கினோம். ஆக, அவர்களுடைய பாவங்களினால் அவர்களை அழித்தோம். இன்னும், அவர்களுக்குப் பின்னர் வேறு சமுதாயத்தை உருவாக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்கு நாம் செய்து தந்திருந்தோம். வானத்திலிருந்து தாரை தாரையாக மழை பெய்யும்படிச் செய்து, அவர்களின் (ஆதிக்கத்தின்) கீழ் நீரருவிகளும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்படி செய்தோம். (எனினும் அவர்கள் பாவத்திலேயே ஆழ்ந்து விட்டனர்.) ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை அழித்துவிட்டோம். அவர்களுக்குப் பின்னர் மற்றொரு கூட்டத்தாரை நாம் உற்பத்தி செய்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70