وَمِنْهُم مَّن يَسْتَمِعُ إِلَيْكَ وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًا وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍ لَّا يُؤْمِنُوا۟ بِهَا حَتَّىٰٓ إِذَا جَآءُوكَ يُجَٰدِلُونَكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உம் பக்கம் செவிசாய்ப்பவரும் அவர்களில் உண்டு. அவர்களுடைய உள்ளங்களில் அதை புரிந்துகொள்வதற்கு (தடையாக) திரைகளையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் ஆக்கினோம். எல்லா அத்தாட்சிகளையும் அவர்கள் பார்த்தாலும் அவற்றை (அவர்கள்) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (நபியே!) முடிவாக, அவர்கள் உம்மிடம் தர்க்கித்தவர்களாக வந்தால் நிராகரித்த (அ)வர்கள், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளைத் தவிர (வேறு) இல்லை” என்றே கூறுவார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) உம் பக்கம் செவி சாய்ப்பவரும் அவர்களில் உண்டு. அவர்களுடைய உள்ளங்களில் அதை புரிந்துகொள்வதற்கு தடையாக திரைகளையும், அவர்களுடைய காதுகளில் செவிடையும் ஆக்கினோம். இன்னும், ஒவ்வொரு அத்தாட்சியை அவர்கள் பார்த்தாலும் அதை அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (நபியே!) முடிவாக, அவர்கள் உம்மிடம் தர்க்கித்தவர்களாக வந்தால் நிராகரித்த (அ)வர்கள், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளைத் தவிர (உண்மையான இறை வேதம்) இல்லை” என்றே கூறுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. (நபியே! உமக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீர் கூறுவதைக் கேட்க) உமக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்திவிட்டோம். ஆகவே, (இவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் அனைத்தையும் (தெளிவாகக்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்த போதிலும், உம்முடன் தர்க்கித்து, ‘‘இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்.