caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mujaadila அத்தியாயம், வசனம் 10

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 105 · 58:10

إِنَّمَا ٱلنَّجْوَىٰ مِنَ ٱلشَّيْطَٰنِ لِيَحْزُنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَيْسَ بِضَآرِّهِمْ شَيْـًٔا إِلَّا بِإِذْنِ ٱللَّهِ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(சந்தேகத்திற்கிடமாக) கூடிப்பேசுவது ஷைத்தான் புறத்திலிருந்து தூண்டப்படுகிறது. (காரணம்,) நம்பிக்கை கொண்டவர்களை கவலைப்படுத்துவதற்காக. ஆனால், அது அவர்களுக்கு அறவே தீங்கு செய்வதாக இல்லை, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை யாளர்கள் நம்பிக்கை வைக்கட்டும். (அவனையே சார்ந்து இருக்கட்டும்.)
Tamil Translation - Omar Sharif(சந்தேகத்திற்கிடமாக) கூடிப்பேசுவது ஷைத்தான் புறத்திலிருந்து (உங்களுக்கு) தூண்டப்படுகிறது, (ஏனெனில்,) நம்பிக்கை கொண்டவர்களை கவலைப்படுத்துவதற்காக. ஆனால், அது அவர்களுக்கு அறவே தீங்கு செய்வதாக இல்லை, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. (அவர்களை) ஷைத்தான் இரகசியமாகப் பேச வைப்பதெல்லாம், நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கவலையை உண்டுபண்ணுவதற்காகவே. அல்லாஹ்வுடைய நாட்டமின்றி, அவர்களுக்கு அது (-இரகசியம்) அறவே தீங்கிழைக்காது. ஆகவே, நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே நம்பியிருக்கவும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70