ءَأَشْفَقْتُمْ أَن تُقَدِّمُوا۟ بَيْنَ يَدَىْ نَجْوَىٰكُمْ صَدَقَٰتٍ فَإِذْ لَمْ تَفْعَلُوا۟ وَتَابَ ٱللَّهُ عَلَيْكُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் உரையாடலுக்கு முன்னர் தர்மங்களை முற்படுத்துவதற்கு (அப்படி செய்தால் வறுமை வந்துவிடுமென) நீங்கள் பயப்படுகிறீர்களா? நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால், அல்லாஹ்வும் உங்களை மன்னித்துவிட்டதால் (உங்கள் மீது குற்றமில்லை. ஆகவே,) நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஉங்கள் உரையாடலுக்கு முன்னர் தர்மங்கள் செய்வதை (-அப்படி செய்தால் வறுமை வந்துவிடுமோ என) நீங்கள் பயப்படுகிறீர்களா? நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால், அல்லாஹ்வும் உங்களை மன்னித்துவிட்டதால் (உங்கள் மீது குற்றமில்லை.) ஆகவே, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள்! இன்னும், அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. நீங்கள் உங்கள் இரகசியத்திற்கு முன்னர், நீங்கள் தானம் கொடுப்பதைப் பற்றிப் பயந்துவிட்டீர்களா? (மெய்யாகவே) உங்களால் (தானம்) செய்ய முடியாவிடில், அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். எனினும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (உண்மையாகவே) கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.