يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نَٰجَيْتُمُ ٱلرَّسُولَ فَقَدِّمُوا۟ بَيْنَ يَدَىْ نَجْوَىٰكُمْ صَدَقَةً ذَٰلِكَ خَيْرٌ لَّكُمْ وَأَطْهَرُ فَإِن لَّمْ تَجِدُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! நீங்கள் தூதரிடம் கூடிப்பேசினால் நீங்கள் கூடிப் பேசுவதற்கு முன்னர் தர்மத்தை முற்படுத்துங்கள்! அது உங்களுக்கு மிகச் சிறந்ததும் மிக பரிசுத்தமானதும் ஆகும். நீங்கள் (எதையும் தர்மம் செய்ய) வசதி பெறவில்லை என்றால் (அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! நீங்கள் தூதரிடம் கூடிப்பேசினால் நீங்கள் கூடிப் பேசுவதற்கு முன்னர் (ஏழைகளுக்கு) தர்மம் செய்யுங்கள்! அது உங்களுக்கு மிகச் சிறந்ததும் மிக பரிசுத்தமானதும் ஆகும். நீங்கள் (எதையும் தர்மம் செய்ய) வசதி பெறவில்லை என்றால் (அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம் தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்து விடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதையும்) நீங்கள் அடைந்திரா விட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.