أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ تَوَلَّوْا۟ قَوْمًا غَضِبَ ٱللَّهُ عَلَيْهِم مَّا هُم مِّنكُمْ وَلَا مِنْهُمْ وَيَحْلِفُونَ عَلَى ٱلْكَذِبِ وَهُمْ يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் கோபப்பட்ட மக்களை (-யூதர்களை) நண்பர்களாக எடுத்துக் கொண்ட (நய)வ(ஞ்சக)ர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? அவர்கள் (-நயவஞ்சகர்கள்) உங்களை சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் அவர்களை சேர்ந்தவர்களும் இல்லை. அவர்கள் அறிந்து கொண்டே பொய்யான விஷயத்தின் மீது சத்தியம் செய்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் கோபித்த மக்(களாகிய யூதர்)களை நண்பர்களாக எடுத்துக் கொண்ட (நய)வ(ஞ்சக)ர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? அவர்கள் (-நயவஞ்சகர்கள்) உங்களை சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் அவர்களை (-யூதர்களை) சேர்ந்தவர்களும் இல்லை. அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுக்கு முன்னர்) பொய்யான விஷயத்தின் மீது சத்தியம் செய்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. (நபியே!) அல்லாஹ் எவர்கள் மீது கோபமானானோ, அந்த மக்களுடன் உறவாடுகிறவர்களை நீர் பார்த்தீரா? இவர்கள் உங்களிலும் உள்ளவர்களல்ல; அவர்களிலும் உள்ளவர்களல்ல. இவர்கள் நன்கறிந்திருந்தும் (உங்களுடன் இருப்பதாக) வேண்டுமென்றே பொய் சத்தியம் செய்கின்றனர்.