caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 93

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:93

لَيْسَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوٓا۟ إِذَا مَا ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ ثُمَّ ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ ثُمَّ ٱتَّقَوا۟ وَّأَحْسَنُوا۟ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்டு நன்மைகளைச் செய்தவர்கள் மீது குற்றமில்லை. (தடுக்கப்பட்ட உணவை தடை வருவதற்கு முன்பு) அவர்கள் புசித்ததில், (தடைக்குப் பின்பு அதிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்து, பிறகு அல்லாஹ்வை அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பிறகு, அல்லாஹ்வை அஞ்சி, (பிறருக்கும்) நல்லறம் செய்தால், (தடுக்கப்பட்டவற்றை அவர்கள் முன்பு புசித்தது மன்னிக்கப்படும்). அல்லாஹ் நல்லறம் புரிவோரை நேசிக்கிறான்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கை கொண்டு நன்மைகளைச் செய்தவர்கள் மீது குற்றமில்லை, (தடுக்கப்பட்ட உணவை அதன் தடை வருவதற்கு முன்பு) அவர்கள் புசித்ததில், (தடைக்குப் பின்பு அதிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்து, பிறகு அல்லாஹ்வை அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பிறகு, அல்லாஹ்வை அஞ்சி, நல்லறம் செய்தால், (தடுக்கப்பட்டவற்றை அவர்கள் முன்பு புசித்தது மன்னிக்கப்படும்). அல்லாஹ் நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi93. நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் (அது) அவர்களின் மீது குற்றமாகாது, (தடுக்கப்பட்டபின் அவற்றிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கையின் மீதே உறுதியாக இருந்து, நற்செயல்களையும் செய்து, (மற்ற பாவங்களிலிருந்தும்) விலகி, நம்பிக்கையை உறுதிப்படுத்தி, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (போதுமானது. ஆகவே, தடுக்கப்பட்டவற்றை முன்னர் புசித்துவிட்டது பற்றிக் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது.) அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70