caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 92

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:92

وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَٱحْذَرُوا۟ فَإِن تَوَلَّيْتُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள்; தூதருக்கு கீழ்ப்படியுங்கள்; (பாவங்களை விட்டு விலகி) எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் (அறிவுரையை புறக்கணித்து) திரும்பினால் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது தான் நம் தூதர் மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள்; இன்னும், (அவனுடைய) தூதருக்கு கீழ்ப்படியுங்கள். இன்னும், (பாவங்களை விட்டு விலகி, ஷைத்தானிடமும் நஃப்ஸிடமும்) எச்சரிக்கையாக இருங்கள். ஆக, நீங்கள் (அறிவுரையை) புறக்கணித்தால் நம் தூதர் மீதுள்ள கடமை எல்லாம் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பதுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi92. அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70