قُلْ يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لَا تَغْلُوا۟ فِى دِينِكُمْ غَيْرَ ٱلْحَقِّ وَلَا تَتَّبِعُوٓا۟ أَهْوَآءَ قَوْمٍ قَدْ ضَلُّوا۟ مِن قَبْلُ وَأَضَلُّوا۟ كَثِيرًا وَضَلُّوا۟ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"வேதக்காரர்களே! உண்மைக்கு முரணாக, உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள். முன்பு வழிதவறிவிட்ட சமுதாயத்தின் விருப்பங்களை பின்பற்றாதீர்கள். அவர்கள் பலரை வழி கெடுத்தனர், நேரான பாதையிலிருந்து (தாங்களும்) வழி தவறினர்.” என்று (நபியே!) கூறுவீராக.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! உண்மைக்கு முரணாக, உங்கள் மார்க்கத்தில் எல்லை மீறாதீர்கள். இன்னும், முன்பு வழிதவறிவிட்ட சமுதாயத்தின் (கெட்ட) பழக்கங்களை பின்பற்றாதீர்கள். அவர்கள் பலரை வழி கெடுத்தனர். இன்னும், நேரான பாதையிலிருந்து (தாங்களும்) வழி தவறினர்.’’
Tamil Translation - Abdulhamid Baqawi77. ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் (எதையும்) மிகைபடக் கூறி வரம்பு மீறாதீர்கள். மேலும், இதற்கு முன்னர் (இவ்வாறு) வழி தவறிய மக்களின் விருப்பங்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் நேரான வழியில் இருந்து தவறிவிட்டதுடன் (மற்றும்) பலரை வழி கெடுத்தும் இருக்கின்றனர்'' என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.