قُلْ أَتَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا نَفْعًا وَٱللَّهُ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு தீங்களிப்பதற்கும் பலனளிப்பதற்கும் உரிமை பெறாதவற்றை வணங்குகிறீர்களா?” என்று (நபியே!) கூறுவீராக. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன்.
Tamil Translation - Omar Sharif“உங்களுக்கு தீங்களிப்பதற்கும் பலனளிப்பதற்கும் சக்தி பெறாதவற்றை அல்லாஹ்வை அன்றி வணங்குகிறீர்களா?’’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi76. (அன்றி அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு ஒரு நன்மையோ தீமையோ செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள் ?'' என்று (நபியே!) நீர் கேட்பீராக. அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) மிக அறிந்தவன் ஆவான்.