caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 66

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:66

وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا۟ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيْهِم مِّن رَّبِّهِمْ لَأَكَلُوا۟ مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِم مِّنْهُمْ أُمَّةٌ مُّقْتَصِدَةٌ وَكَثِيرٌ مِّنْهُمْ سَآءَ مَا يَعْمَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதவ்றாத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்ட (இந்த வேதத்)தையும் அவர்கள் நிலைநிறுத்தி இருந்தால் அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்கு கீழிருந்தும் நிச்சயமாக புசித்திருப்பார்கள். அவர்களில் ஒரு நேர்மையான கூட்டம் இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் அவர்கள் செய்பவை கெட்டுவிட்டன.
Tamil Translation - Omar Sharifஇன்னும், தவ்ராத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்ட (இந்த வேதத்)தையும் அவர்கள் நிலைநிறுத்தி இருந்தால் அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்கு கீழிருந்தும் நிச்சயமாக புசித்திருப்பார்கள். அவர்களில் ஒரு நேர்மையான கூட்டம் இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானோர், அவர்கள் செய்பவை எல்லாம் மிகக் கெட்டவை ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi66. தவ்றாத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) அவர்கள் பின்பற்றி நிலைநிறுத்தி வந்தால் (எவ்விதக் கஷ்டமுமின்றி,) அவர்களுக்கு மே(ல் வானத்தி)லிருந்தும், அவர்களுடைய பாதங்களின் கீழ் (பூமியில்) இருந்தும் புசிப்பார்கள். ஆனால், அவர்களில் சிலர்தான் நேர்மையான கூட்டத்தினராக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் செய்யும் காரியங்கள் (மிகக்) கெட்டவையாக இருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70