caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 65

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:65

وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْكِتَٰبِ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَكَفَّرْنَا عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَأَدْخَلْنَٰهُمْ جَنَّٰتِ ٱلنَّعِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக, வேதக்காரர்கள் (இத்தூதரை) நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சி இருந்தால் அவர்களை விட்டும் அவர்களுடைய பாவங்களை நிச்சயமாக அகற்றிடுவோம். இன்பம் நிறைந்த சொர்க்கங்களில் அவர்களை நிச்சயமாக நுழைத்திடுவோம்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக, வேதக்காரர்கள் (இத்தூதரை) நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை அஞ்சி இருந்தால் அவர்களை விட்டும் அவர்களுடைய பாவங்களை நிச்சயமாக நாம் அகற்றிவிடுவோம். இன்னும், இன்பம் நிறைந்த சொர்க்கங்களில் அவர்களை நிச்சயமாக பிரவேசிக்கச் செய்வோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi65. வேதத்தையுடைய இவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் (அதை) அவர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, எல்லா இன்பங்களுமுள்ள சொர்க்கங்களில் நிச்சயமாக நாம் அவர்களை நுழைவிப்போம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70