caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 34

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:34

إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ مِن قَبْلِ أَن تَقْدِرُوا۟ عَلَيْهِمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் அவர்கள் மீது ஆற்றல் பெறுவதற்கு முன்னர் (மன்னிப்புக் கோரி) திருந்தி திரும்பியவர்களைத் தவிர. (அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.) ஆக, நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Omar Sharifஎனினும், எவர்கள் (கலகம் செய்த பின்னர் அவர்கள்) மீது நீங்கள் ஆற்றல் பெறுவதற்கு முன்னர் அவர்கள் (மன்னிப்புக் கோரி) திருந்தி (உங்களிடம்) திரும்பிவந்தார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.) ஆக, நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi34. எனினும், அவர்கள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னதாகவே கைசேதப்பட்(டு, தங்கள் விஷமத்தில் இருந்து விலகிக்கொண்)டவர்களைத் தவிர நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக மன்னிப்பவன் பெரும் கருணை புரிபவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70