قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ ٱللَّهُمَّ رَبَّنَآ أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ ٱلسَّمَآءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَءَاخِرِنَا وَءَايَةً مِّنكَ وَٱرْزُقْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமர்யமுடைய மகன் ஈஸா கூறினார்: “அல்லாஹ்வே, எங்கள் இறைவா! வானத்திலிருந்து ஓர் உணவுத் தட்டை எங்கள் மீது இறக்கு! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னிடமிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளி! நீ உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”
Tamil Translation - Omar Sharifமர்யமுடைய மகன் ஈஸா கூறினார்: “அல்லாஹ்வே, எங்கள் இறைவா! வானத்திலிருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு இறக்கிக் கொடு! எங்களுக்கும், எங்கள் முன் (எங்களோடு சம காலத்தில்) இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னிடமிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும், எங்களுக்கு உணவளி! நீ உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi114. அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா ‘‘எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கிவைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன் (வல்லமைக்கு) ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். ஆகவே, (அவ்வாறே) எங்களுக்கும் உணவை அளிப்பாயாக! நீயோ உணவளிப்பதில் மிகச் சிறந்தவன்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.