قَالُوا۟ نُرِيدُ أَن نَّأْكُلَ مِنْهَا وَتَطْمَئِنَّ قُلُوبُنَا وَنَعْلَمَ أَن قَدْ صَدَقْتَنَا وَنَكُونَ عَلَيْهَا مِنَ ٱلشَّٰهِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அதற்கவர்கள்) அதிலிருந்து நாங்கள் புசிப்பதற்கு, எங்கள் உள்ளங்கள் திருப்தியடைவதற்கு, நீர் எங்களிடம் உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிவதற்கும், சாட்சியாளர்களில் நாங்கள் ஆகிவிடுவதற்கும் நாடுகிறோம் என்று கூறினர்.
Tamil Translation - Omar Sharif(அதற்கவர்கள்) கூறினார்கள்: “அதிலிருந்து நாங்கள் புசிப்பதற்கும், எங்கள் உள்ளங்கள் திருப்தியடைவதற்கும், நீர் எங்களிடம் திட்டமாக உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிவதற்கும், சாட்சியாளர்களில் நாங்கள் ஆகிவிடுவதற்கும் விரும்புகிறோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi113. அதற்கவர்கள், ‘‘அதிலிருந்து நாங்கள் புசித்து, எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், நீர் (உமது தூதைப் பற்றி) மெய்யாகவே உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிந்து கொண்டு அதற்கு நாங்களும் சாட்சியாக இருக்கவுமே விரும்புகிறோம்'' என்று கூறினார்கள்.