caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 115

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:115

قَالَ ٱللَّهُ إِنِّى مُنَزِّلُهَا عَلَيْكُمْ فَمَن يَكْفُرْ بَعْدُ مِنكُمْ فَإِنِّىٓ أُعَذِّبُهُۥ عَذَابًا لَّآ أُعَذِّبُهُۥٓ أَحَدًا مِّنَ ٱلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் அதை உங்கள் மீது இறக்குவேன். ஆகவே, பின்னர் உங்களில் எவர் நிராகரிப்பாரோ, உலகத்தாரில் ஒருவருக்கும் கொடுக்காத வேதனையை நிச்சயம் நான் அவருக்கு கொடுப்பேன்.”
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிக் கொடுப்பேன். ஆக, (அதற்கு) பின்னர் உங்களில் எவர் நிராகரிப்பாரோ, உலக மக்களில் ஒருவரையும் நான் தண்டிக்காத தண்டனையால் நிச்சயம் நான் அவரை தண்டிப்பேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi115. அதற்கு அல்லாஹ் ‘‘நிச்சயமாக நான் (நீங்கள் கேட்டவாறு) அதை உங்களுக்கு இறக்கிவைப்பேன். (எனினும்) இதற்குப் பின்னர் உங்களில் எவரேனும் (என் கட்டளைக்கு) மாறு செய்தால், அவரை உலகத்தில் எவருக்கும் செய்திராத அவ்வளவு கொடியதொரு வேதனையைக் கொண்டு நிச்சயமாக நான் தண்டிப்பேன்'' என்று கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70