وَإِذْ صَرَفْنَآ إِلَيْكَ نَفَرًا مِّنَ ٱلْجِنِّ يَسْتَمِعُونَ ٱلْقُرْءَانَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوٓا۟ أَنصِتُوا۟ فَلَمَّا قُضِىَ وَلَّوْا۟ إِلَىٰ قَوْمِهِم مُّنذِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஜின்களின் சில நபர்களை உம் பக்கம் நாம் திருப்பிய சமயத்தை நினைவு கூர்வீராக! அவர்கள் (நீர் ஓதுகின்ற) குர்ஆனை செவிமடுக்கின்றனர். அவர்கள் அந்த இடத்திற்கு வந்த போது, வாய்மூடி இருங்கள்! என்று (தங்களுக்குள்) கூறினார்கள். (குர்ஆன் ஓதி) முடிக்கப்பட்ட போது அவர்கள் தங்களது சமுதாயத்தினர் பக்கம் (அவர்களை) எச்சரிப்பவர்களாகத் திரும்பினார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஜின்களின் சில நபர்களை உம் பக்கம் நாம் திருப்பிய சமயத்தை நினைவு கூர்வீராக! அவர்கள், (நீர் ஓதுகின்ற) குர்ஆனை செவியுறுகிறார்கள். அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, “வாய்மூடி இருங்கள்!” என்று (தங்களுக்குள்) கூறினார்கள். ஆக, (குர்ஆன் ஓதி) முடிக்கப்பட்டபோது அவர்கள் தங்களது சமுதாயத்தினர் பக்கம் (அவர்களை) எச்சரிப்பவர்களாகத் திரும்பினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. (நபியே!) இந்த குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) ‘‘நீங்கள் வாய் பொத்தி (இதைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்'' என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர்.