caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahqaf அத்தியாயம், வசனம் 30

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 66 · 46:30

قَالُوا۟ يَٰقَوْمَنَآ إِنَّا سَمِعْنَا كِتَٰبًا أُنزِلَ مِنۢ بَعْدِ مُوسَىٰ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِىٓ إِلَى ٱلْحَقِّ وَإِلَىٰ طَرِيقٍ مُّسْتَقِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அந்த ஜின்கள்) கூறினார்கள்: எங்கள் சமுதாயமே! மூஸாவிற்கு பின்னர் தனக்கு முந்தியவற்றை (-முந்திய வேதங்களை) உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். உண்மைக்கும் மிக நேரான பாதைக்கும் அது வழி காட்டுகிறது.
Tamil Translation - Omar Sharif(அந்த ஜின்கள்) கூறினார்கள்: “எங்கள் சமுதாயமே! மூஸாவிற்கு பின்னர் தனக்கு முந்தியவற்றை (-முந்திய வேதங்களை) உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். அது, (அல்லாஹ்வின் பொருத்தம் எதில் இருக்குமோ அந்த) உண்மைக்கும் (இஸ்லாம் என்ற) மிக நேரான பாதைக்கும் வழிகாட்டுகிறது.”
Tamil Translation - Abdulhamid Baqawi30. (அவர்களை நோக்கி) ‘‘எங்கள் இனத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கிறது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகிறது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70