caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahqaf அத்தியாயம், வசனம் 28

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 66 · 46:28

فَلَوْلَا نَصَرَهُمُ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ قُرْبَانًا ءَالِهَةًۢ بَلْ ضَلُّوا۟ عَنْهُمْ وَذَٰلِكَ إِفْكُهُمْ وَمَا كَانُوا۟ يَفْتَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை அன்றி இவர்கள் வழிபாட்டுக்காக எவர்களை தெய்வங்களாக எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? மாறாக, அவர்கள் (-தெய்வங்கள்) இவர்களை (-வணங்கியவர்களை) விட்டு மறைந்து விட்டனர். இது (-சிலை வணக்க வழிபாடு) இவர்களின் பொய்யும் இன்னும் இவர்கள் (எதை) இட்டுக் கட்டுபவர்களாக இருந்தார்களோ அதுவுமாகும். (பல தெய்வ வழிபாடும் சிலை வழிபாடுகளும் மனிதர்கள் பொய்யாக இட்டுக்கட்டியதும் அவர்கள் கற்பனை செய்ததும்தான். அவற்றுக்கு எவ்வித உண்மை ஆதாரம் இல்லை.)
Tamil Translation - Omar Sharifஆக, இவர்கள் அல்லாஹ்வை அன்றி வழிபாட்டுக்காக எவர்களை தெய்வங்களாக எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? மாறாக, அவர்கள் (-அந்த தெய்வங்கள், அவற்றை வணங்கிய) இவர்களை விட்டு மறைந்து விட்டனர். இ(ந்த சிலை வணக்க வழிபாடு என்ப)து இவர்களின் இட்டுக் கட்டப்பட்டப் பொய்யாகும். இன்னும், இவர்கள் (எதை) கற்பனையாக இட்டுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ அந்த கற்பனையுமாகும். (பல தெய்வ வழிபாடும் சிலை வழிபாடுகளும் மனிதர்கள் பொய்யாக இட்டுக்கட்டியதும் அவர்களின் கற்பனையும் ஆகும். அதற்கு உண்மையான ஆதாரம் ஏதும் இல்லை.)
Tamil Translation - Abdulhamid Baqawi28. (அல்லாஹ்வுக்குத்) தங்களைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்கள் என்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவையேனும் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? ஆனால், அவையெல்லாம் இவர்களை விட்டும் மறைந்து விட்டன. இவையெல்லாம் அவர்கள் கற்பனை செய்துகொண்டு பொய்யாகக் கூறியவைதான் (என்று தெளிவாகி விட்டது).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70