وَلَقَدْ أَهْلَكْنَا مَا حَوْلَكُم مِّنَ ٱلْقُرَىٰ وَصَرَّفْنَا ٱلْـَٔايَٰتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஊர்களில் உங்களை சுற்றி உள்ளவற்றை நாம் திட்டவட்டமாக அழித்தோம். அவர்கள் (நம் பக்கம்) திரும்புவதற்காக அத்தாட்சிகளை நாம் விவரித்தோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களை சுற்றி உள்ள ஊர்களை நாம் திட்டவட்டமாக அழித்தோம். இன்னும், (அவர்களை அழிப்பதற்கு முன்னர்) அவர்கள் (நம் பக்கம்) திரும்புவதற்காக அத்தாட்சிகளை நாம் (அவர்களுக்கு) விவரித்தோம். (ஆனால், அவர்கள் புறக்கணித்து சென்றபோது நமது தண்டனை அவர்களுக்கு வந்தது.)
Tamil Translation - Abdulhamid Baqawi27. உங்களைச் சூழ்ந்து (வசித்து) இருந்த ஊரார்களையும் நிச்சயமாக நாம் அழித்து விட்டோம். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி நம்மிடம்) திரும்பி வரும் பொருட்டுப் பல அத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் காண்பித்து வந்தோம். (எனினும், அவற்றை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம்.)