caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahqaf அத்தியாயம், வசனம் 15

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 66 · 46:15

وَوَصَّيْنَا ٱلْإِنسَٰنَ بِوَٰلِدَيْهِ إِحْسَٰنًا حَمَلَتْهُ أُمُّهُۥ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُۥ وَفِصَٰلُهُۥ ثَلَٰثُونَ شَهْرًا حَتَّىٰٓ إِذَا بَلَغَ أَشُدَّهُۥ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَٰلِحًا تَرْضَىٰهُ وَأَصْلِحْ لِى فِى ذُرِّيَّتِىٓ إِنِّى تُبْتُ إِلَيْكَ وَإِنِّى مِنَ ٱلْمُسْلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதனுக்கு நாம் உபதேசித்தோம்: - “தன் பெற்றோருக்கு நன்மை செய்வதற்கு.” அவனது தாய் அவனை சிரமத்துடன் (வயிற்றில்) சுமந்தாள். சிரமத்துடன் அவனை ஈன்றெடுத்தாள். அவனை (அவள்) சுமந்ததும் அவனுக்கு (அவள்) பால் குடி மறக்கச் செய்ததும் முப்பது மாதங்களாகும். இறுதியாக, அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது வயதை அடைந்தால் அவன் கூறுகிறான்: என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள் புரிந்த உனது அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ திருப்திபடுகின்ற நல்ல அமலை நான் செய்வதற்கும் என்னைத்தூண்டுவாயாக! என் சந்ததியில் எனக்கு சீர்திருத்தம் செய்! நிச்சயமாக நான் உன் பக்கம் திரும்பிவிட்டேன். நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாவேன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “தன் பெற்றோருக்கு மிகவும் நல்லமுறையில் நன்மை செய்யும்படி” மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனது தாய் அவனை சிரமத்துடன் (வயிற்றில்) சுமந்தாள். சிரமத்துடன் அவனை ஈன்றெடுத்தாள். அவனை (அவள்) சுமந்ததும் அவனுக்கு (அவள்) பால்குடி மறக்கச் செய்ததும் முப்பது மாதங்களாகும். இறுதியாக, அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது வயதை அடைந்தபோது, அவன் கூறுகிறான்: “என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள் புரிந்த உனது அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ திருப்திபடுகின்ற நல்ல அமலை நான் செய்வதற்கும் எனக்கு உத்வேகத்தை ஏற்படுத்துவாயாக! என் சந்ததியில் எனக்கு சீர்திருத்தம் செய்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கம் திரும்பிவிட்டேன். நிச்சயமாக நான் முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்கிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi15. மனிதன் தன் தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், சிரமத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து சிரமத்துடனேயே பிரசவிக்கிறாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரை, முப்பது மாதங்கள் (மிக்க சிரமத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் ‘‘என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன் திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என் குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்'' என்று கூறுவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70