caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahqaf அத்தியாயம், வசனம் 16

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 66 · 46:16

أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ نَتَقَبَّلُ عَنْهُمْ أَحْسَنَ مَا عَمِلُوا۟ وَنَتَجَاوَزُ عَن سَيِّـَٔاتِهِمْ فِىٓ أَصْحَٰبِ ٱلْجَنَّةِ وَعْدَ ٱلصِّدْقِ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், இவர்கள் செய்தவற்றில் மிக அழகானதை நாம் இவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்வோம். இவர்களின் பாவங்களை நாம் மன்னித்து விடுவோம். இவர்கள் சொர்க்க வாசிகளில் இருப்பார்கள். இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த உண்மையான வாக்காகும் இது.
Tamil Translation - Omar Sharifஇவர்கள் எத்தகையோர் என்றால் இவர்கள் செய்த மிக அழகானதை நாம் இவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்வோம். இன்னும், இவர்களின் (முந்திய) தவறுகளை நாம் (தண்டிக்காமல்) புறக்கணித்து விடுவோம். இவர்கள் சொர்க்கவாசிகளில் இருப்பார்கள். இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த உண்மையான வாக்காகும் (இது.)
Tamil Translation - Abdulhamid Baqawi16. இத்தகையவர்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் நாம் அங்கீகரித்துக் கொண்டு, சொர்க்கவாசிகளான இவர்களின் பாவங்களையும் மன்னித்து விட்டு விடுவோம். இவர்களுக்கு அளிக்கப்பட்ட இவ்வாக்கு உண்மையான வாக்குறுதியாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70