caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahqaf அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 66 · 46:11

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوا۟ لَوْ كَانَ خَيْرًا مَّا سَبَقُونَآ إِلَيْهِ وَإِذْ لَمْ يَهْتَدُوا۟ بِهِۦ فَسَيَقُولُونَ هَٰذَآ إِفْكٌ قَدِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரித்தவர்கள் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி கூறினார்கள்: இது (-இந்த வேதமும் இந்த மார்க்கமும்) சிறந்ததாக இருந்தால் இவர்கள் (இந்த பாமர மக்கள்) இதனளவில் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள். அவர்கள் இதன் மூலம் நேர்வழி பெறாமல் போனபோது, “இது பழைய பொய்யாகும்” என்று கூறுகின்றனர்.
Tamil Translation - Omar Sharifநிராகரித்தவர்கள், நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி கூறினார்கள்: “இ(ந்த வேதமான)து சிறந்ததாக இருந்தால் (பாமர மக்களாகிய) இவர்கள் இதனளவில் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள். அவர்கள் இதன் மூலம் நேர்வழி பெறாமல் போனபோது, “இது பழைய பொய்யாகும்” என்று (கேலியாக) கூறுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘இவ்வேதம் நன்மையானதாக இருந்தால் (அதை நம்பிக்கைகொள்ள இப்பாமர மக்கள்) எங்களைவிட முந்தியிருக்க மாட்டார்கள். (இதில் ஒரு நன்மையுமே இல்லை. ஆதலால்தான், அதை நாங்கள் நிராகரித்து விட்டோம்)'' என்றும் கூறுகின்றனர். அவர்கள் இ(வ்வுண்மையான வேதத்)தைப் பின்பற்றாத நிலைமையில், இது பழங்காலத்துப் பொய்யான கட்டுக்கதைகள்தான் என்றும் அவர்கள் கூறுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70