وَمِن قَبْلِهِۦ كِتَٰبُ مُوسَىٰٓ إِمَامًا وَرَحْمَةً وَهَٰذَا كِتَٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِيًّا لِّيُنذِرَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ وَبُشْرَىٰ لِلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு முன்னோடியாகவும் அருளாகவும் இருக்கின்றது. (அதையும் நாம்தான் இறக்கினோம்.) இதுவோ (முந்திய வேதங்களை) மெய்ப்பிக்கக்கூடிய அரபி மொழியில் உள்ள ஒரு வேதமாகும், அநியாயக்காரர்களை எச்சரிப்பதற்காகவும் நல்லவர்களுக்கு நற்செய்தியாகவும் (இதையும் நாம்தான் இறக்கினோம்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டுகின்ற முன்னோடியாகவும் அருளாகவும் இருக்கிறது. (அதையும் நாம்தான் இறக்கினோம். அது இந்த வேதத்திற்கு சாட்சியாக இருக்கிறது.) இன்னும், இதுவோ (முந்திய வேதங்களை) உண்மைப்படுத்தக்கூடிய, (தெளிவான) அரபி மொழியில் உள்ள வேதமாகும். அநியாயக்காரர்களை எச்சரிப்பதற்காகவும் நல்லவர்களுக்கு நற்செய்தியாக இருப்பதற்காகவும் (இது இறக்கப்பட்டது).
Tamil Translation - Abdulhamid Baqawi12. இதற்கு முன்னர், மூஸாவுடைய வேதம் (மக்களுக்கு) வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தது. இதுவோ, (அதை) உண்மைப்படுத்தும் வேதமாகத் தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. இன்னும் அநியாயக்காரர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்துகொண்டும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி கூறிக்கொண்டும் இருக்கிறது.