وَخَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ وَلِتُجْزَىٰ كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்காக (-அவனது வல்லமையை அடியார்கள் அறிவதற்காக)வும் ஒவ்வொரு ஆன்மாவும் அது எதை செய்ததோ அதற்கு கூலி கொடுக்கப்படுவதற்காகவும் படைத்தான். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ் வானங்களையும் பூமியையும் - உண்மையான காரணத்திற்காக (-அவனது வல்லமையை அடியார்கள் அறிவதற்காக)வும் ஒவ்வொரு ஆன்மாவும் அது எதை செய்ததோ அதற்குக் கூலி கொடுக்கப்படுவதற்காகவும் - படைத்தான். இன்னும், அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கிறான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவற்றின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். அவை (அணுவளவும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.