caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Jaathiya அத்தியாயம், வசனம் 23

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 65 · 45:23

أَفَرَءَيْتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ وَأَضَلَّهُ ٱللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِۦ وَقَلْبِهِۦ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِۦ غِشَٰوَةً فَمَن يَهْدِيهِ مِنۢ بَعْدِ ٱللَّهِ أَفَلَا تَذَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) தனது மனவிருப்பத்தை தனது கடவுளாக எடுத்துக் கொண்டவனைப் பற்றி நீர் அறிவிப்பீராக! (அவனுக்கு நேர்வழியின்) அறிவு வந்ததன் பின்னர் அல்லாஹ் அவனை வழிகெடுத்தான். அவனது செவியிலும் அவனது உள்ளத்திலும் அவன் முத்திரையிட்டான். அவனது பார்வையில் திரையை அவன் ஆக்கினான். ஆகவே, அல்லாஹ்விற்குப் பின் (-அல்லாஹ் கைவிட்ட பின்) யார் அவனுக்கு நேர்வழி காட்டுவார். நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
Tamil Translation - Omar Sharif(நபியே!) தனது மனவிருப்பத்தை தனது கடவுளாக எடுத்துக் கொண்டவனைப் பற்றி நீர் அறிவிப்பீராக! இன்னும், (அவனுக்கு நேர்வழியின்) அறிவு வந்ததன் பின்னர் (அவன் அதை பின்பற்றாமல் தனது மனவிருப்பத்தை பின்பற்றியதால்) அல்லாஹ் அவனை வழிகெடுத்தான். இன்னும், அவனது செவியிலும் அவனது உள்ளத்திலும் அவன் முத்திரையிட்டான். இன்னும், அவனது பார்வையில் திரையை அவன் ஆக்கினான். ஆகவே, அல்லாஹ்விற்குப் பின்னர் (-அல்லாஹ் அவனை கைவிட்ட பின்னர்) யார் அவனுக்கு நேர்வழி காட்டுவார்? ஆக, நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi23. (நபியே!) தன் இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக் கொண்ட ஒருவனை நீர் கவனித்தீரா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டுவிட்டான். அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? நீங்கள் நல்லுணர்வு பெற வேண்டாமா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70