caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Jaathiya அத்தியாயம், வசனம் 21

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 65 · 45:21

أَمْ حَسِبَ ٱلَّذِينَ ٱجْتَرَحُوا۟ ٱلسَّيِّـَٔاتِ أَن نَّجْعَلَهُمْ كَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ سَوَآءً مَّحْيَاهُمْ وَمَمَاتُهُمْ سَآءَ مَا يَحْكُمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபாவங்களை செய்தவர்கள் எண்ணுகின்றார்களா, - நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களைப் போன்று அவர்களை நாம் ஆக்குவோம் என்று? இ(ந்த இரு கூட்டத்த)வர்களின் வாழ்க்கையையும் இ(ந்த இரு கூட்டத்த)வர்களின் மரணத்தையும் சமமாக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றனரா? (அவ்வாறு ஆக்க மாட்டோம். இவ்வுலகில் முஃமினாக இருந்தவர் இறக்கும் போதும் முஃமினாக இருப்பார், மறுமையிலும் முஃமினாக இருப்பார். இவ்வுலகில் காஃபிராக இருந்தவர் மறுமையிலும் காஃபிராகத்தான் இருப்பார்.) இவர்கள் எதை தீர்ப்பளிக்கின்றார்களோ அது மிகக் கெட்டது.
Tamil Translation - Omar Sharifபாவங்களை செய்தவர்கள் எண்ணுகிறார்களா, “நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களைப் போன்று அவர்களை நாம் ஆக்குவோம்” என்று? இ(ந்த இரு கூட்டத்த)வர்களின் வாழ்க்கையையும் இ(ந்த இரு கூட்டத்த)வர்களின் மரணத்தையும் நாம் சமமாக ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகிறார்களா? (அவ்வாறு ஆக்கவே மாட்டோம். இவ்வுலகில் முஃமினாக இருந்தவர் இறக்கும்போதும் முஃமினாக இருப்பார், மறுமையிலும் முஃமினாக இருப்பார். இவ்வுலகில் காஃபிராக இருந்தவர் மறுமையிலும் காஃபிராகத்தான் இருப்பார்.) இவர்கள் எதை தீர்ப்பளிக்கிறார்களோ அது மிகக் கெட்ட தீர்ப்பாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்களை, நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே. அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்து கொண்ட முடிவு மகா கெட்டது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70