caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zukhruf அத்தியாயம், வசனம் 23

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 63 · 43:23

وَكَذَٰلِكَ مَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِى قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَآ إِنَّا وَجَدْنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٍ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّقْتَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறு உமக்கு முன்னர் நாம் எந்த ஓர் எச்சரிப்பாளரையும் ஓர் ஊரில் அனுப்பியதில்லை, “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)” என்று அதன் செல்வந்தர்கள் கூறியே தவிர. (முன்சென்ற மக்கள் தங்களது தூதர்களுக்கு கூறியதைத்தான் உமது மக்களும் கூறுகிறார்கள்.)
Tamil Translation - Omar Sharifஇவ்வாறு, உமக்கு முன்னர் நாம் எச்சரிப்பாளர் எவரையும் ஓர் ஊரில் அனுப்பியபோதெல்லாம், அந்த ஊரில் உள்ள (செல்வந்தர்களாகிய) சுகவாசிகள் - “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)” என்றுதான் கூறி இருக்கிறார்கள். (ஆக, நபியே! முன்சென்ற மக்கள் தங்களது தூதர்களுக்கு கூறியதைத்தான் உமது மக்களும் கூறுகிறார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi23. இவ்வாறே, உங்களுக்கு முன்னரும் எச்சரிக்கும் தூதரை ஓர் ஊராரிடம் நாம் அனுப்பிவைத்தால், அங்குள்ள தலைவர்கள் ‘‘நாங்கள் எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம்; அவர்களின் அடிச்சுவடுகளையே நாங்கள் பின்பற்றிச் செல்வோம்'' என்று கூறாமல் இருக்கவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70