قَٰلَ أَوَلَوْ جِئْتُكُم بِأَهْدَىٰ مِمَّا وَجَدتُّمْ عَلَيْهِ ءَابَآءَكُمْ قَالُوٓا۟ إِنَّا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ كَٰفِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நமது தூதர்) கூறினார்: “நீங்கள் உங்கள் மூதாதைகளை எதன்மீது கண்டீர்களோ அதைவிட மிகச் சிறந்த நேர்வழியை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா (நீங்கள் என்னைப் பின்பற்ற மறுப்பீர்கள்)?” அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள் ஆவோம்”.
Tamil Translation - Omar Sharif(நமது தூதர்) கூறினார்: “நீங்கள் உங்கள் மூதாதைகளை எதன்மீது கண்டீர்களோ அதைவிட மிகச் சிறந்த நேர்வழியை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா (நீங்கள் என்னைப் பின்பற்ற மறுப்பீர்கள்)?” அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ (அது எதுவாக இருந்தாலும் சரி) அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்போம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi24. (அதற்கு, அத்தூதர் அவர்களை நோக்கி) ‘‘உங்கள் மூதாதைகளை நீங்கள் எதில் கண்டீர்களோ அதைவிட நேரான வழியை நான் கொண்டு வந்திருந்த போதிலுமா? (உங்கள் மூதாதைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்)'' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘‘(ஆம்! அவர்களையே நாங்கள் பின்பற்றுவதுடன்) நீங்கள் கொண்டு வந்ததையும் நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கிறோம்'' என்றும் கூறினார்கள்.