caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 48

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:48

فَإِنْ أَعْرَضُوا۟ فَمَآ أَرْسَلْنَٰكَ عَلَيْهِمْ حَفِيظًا إِنْ عَلَيْكَ إِلَّا ٱلْبَلَٰغُ وَإِنَّآ إِذَآ أَذَقْنَا ٱلْإِنسَٰنَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌۢ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَإِنَّ ٱلْإِنسَٰنَ كَفُورٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (உம்மையும் உமது மார்க்கத்தையும்) புறக்கணித்தால் (அதைப் பற்றி நபியே! நீர் கவலைப்படாதீர். ஏனெனில்) நாம் உம்மை அவர்கள் மீது கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (மார்க்கத்தை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறு ஏதும்) உம்மீது கடமை இல்லை. நிச்சயமாக நாம் மனிதர்களுக்கு நம்மிடமிருந்து ஓர் அருளை சுவைக்க வைத்தால் அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவத்)தால் ஒரு தீங்கு ஏற்பட்டால் (அவர்கள் நிராகரித்து விடுகின்றனர். ஏனெனில்) நிச்சயமாக மனிதன் மிகப்பெரிய நிராகரிப்பாளன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் (உம்மையும் உமது மார்க்கத்தையும்) புறக்கணித்தால் (அதைப் பற்றி நபியே! நீர் கவலைப்படாதீர். ஏனெனில்) நாம் உம்மை அவர்கள் மீது கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (மார்க்கத்தை) எடுத்துரைப்பதைத் தவிர (நிர்ப்பந்திப்பது) உம்மீது கடமை இல்லை. நிச்சயமாக நாம் மனிதர்களுக்கு நம்மிடமிருந்து ஓர் அருளை சுவைக்க வைத்தால் அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவத்)தால் ஒரு தீங்கு ஏற்பட்டால் (அவர்கள் நிராகரித்து விடுகிறார்கள்.) ஆக, நிச்சயமாக மனிதன் மிகப்பெரிய நிராகரிப்பாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi48. (நபியே! இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும்) அவர்கள் (உம்மைப்) புறக்கணித்து விட்டால், (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) அவர்களைப் பாதுகாப்பவராக நாம் உம்மை அனுப்பவில்லை. (அவர்களுக்கு நம் தூதை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறொன்றும்) உம் மீது கடமை அல்ல. நம் அருளை மனிதன் சுவைக்கும்படி செய்தால், அதைப் பற்றி அவன் சந்தோஷப்படுகிறான். அவனுடைய கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாக அவனுக்கொரு தீங்கு ஏற்பட்டால் நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாகி (இறைவனையே எதிர்க்க ஆயத்தமாகி) விடுகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70