لِّلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ يَخْلُقُ مَا يَشَآءُ يَهَبُ لِمَن يَشَآءُ إِنَٰثًا وَيَهَبُ لِمَن يَشَآءُ ٱلذُّكُورَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. அவன் தான் நாடுவதை படைக்கின்றான். தான் நாடுகின்றவர்களுக்கு பெண் பிள்ளைகளை வழங்குகின்றான். தான் நாடுகின்றவர்களுக்கு ஆண் பிள்ளைகளை வழங்குகின்றான்.
Tamil Translation - Omar Sharifவானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. அவன், தான் நாடுவதை படைக்கிறான். அவன், தான் நாடுகிறவர்களுக்கு பெண் பிள்ளைகளை வழங்குகிறான். இன்னும், அவன்தான் நாடுகிறவர்களுக்கு ஆண் பிள்ளைகளை வழங்குகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi49. வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. இவற்றைத் தவிர, அவன் விரும்பியதையும் படைக்கிறான். அவன் விரும்பியவர்களுக்குப் பெண் சந்ததியை மட்டும் கொடுக்கிறான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கிறான்.