caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 47

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:47

ٱسْتَجِيبُوا۟ لِرَبِّكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِ مَا لَكُم مِّن مَّلْجَإٍ يَوْمَئِذٍ وَمَا لَكُم مِّن نَّكِيرٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்விடமிருந்து ஒரு நாள் வருவதற்கு முன் உங்கள் இறைவனுக்கு (-அவன் அனுப்பிய தூதருக்கு) நீங்கள் பதில் அளியுங்கள்! (இஸ்லாமிற்குள் நுழைந்து விடுங்கள்!) அதை (-அந்த நாளை) அறவே தடுத்துவிட முடியாது. அந்நாளில் (தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு) உங்களுக்கு ஒதுங்குமிடம் ஏதும் இருக்காது. (உங்களை விட்டும் அந்த தண்டனையை) தடுப்பவர் யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார். (அதை உங்களாலும் மாற்றிவிட முடியாது.)
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்விடமிருந்து ஒரு நாள் வருவதற்கு முன்பாக உங்கள் இறைவனுக்கு (-அவன் அனுப்பிய தூதருக்கு) நீங்கள் பதில் அளியுங்கள்! (இஸ்லாமிற்குள் நுழைந்து விடுங்கள்!) அதை (-அந்த நாளை) அறவே தடுத்துவிட முடியாது. அந்நாளில் (தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு) உங்களுக்கு ஒதுங்குமிடம் ஏதும் இருக்காது. இன்னும், (உங்களை விட்டும் அந்த தண்டனையை) தடுப்பவர் யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார். (நீங்கள் செய்த பாவங்களை உங்களால் மறுக்க முடியாது.)
Tamil Translation - Abdulhamid Baqawi47. அல்லாஹ்விடமிருந்து தட்டிக்கழிக்க முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். அந்நாளில் உங்களுக்குத் தப்புமிடம் கிடைக்காது. (உங்கள் குற்றத்தை) நீங்கள் மறுக்கவும் முடியாது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70