caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Fussilat அத்தியாயம், வசனம் 50

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 61 · 41:50

وَلَئِنْ أَذَقْنَٰهُ رَحْمَةً مِّنَّا مِنۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ هَٰذَا لِى وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةً وَلَئِن رُّجِعْتُ إِلَىٰ رَبِّىٓ إِنَّ لِى عِندَهُۥ لَلْحُسْنَىٰ فَلَنُنَبِّئَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِمَا عَمِلُوا۟ وَلَنُذِيقَنَّهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு நிகழ்ந்த தீங்குக்குப் பின்னர் நம் புறத்தில் இருந்து ஓர் அருளை நாம் அவனுக்கு சுவைக்க வைத்தால் (அதற்கு நன்றி செலுத்தாமல்) “இது எனக்குரியது (-என் தகுதியினால், என் திறமையினால் எனக்கு கிடைத்தது), மறுமை நிகழும் எனவும் நான் எண்ணவில்லை, நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும் நிச்சயமாக எனக்கு அவனிடம் சொர்க்கம் தான் உண்டு” என்று நிச்சயமாக அவன் கூறுகிறான். நிராகரித்தவர்களுக்கு அவர்கள் செய்ததை நாம் நிச்சயமாக அறிவிப்போம். இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையை நாம் சுவைக்க வைப்போம்.
Tamil Translation - Omar Sharifஅவனுக்கு நிகழ்ந்த தீங்குக்குப் பின்னர் நம் புறத்தில் இருந்து ஓர் அருளை நாம் அவனுக்கு சுவைக்க வைத்தால் (அதற்கு நன்றி செலுத்தாமல்,) “இது எனக்குரியது (-என் தகுதியினால், என் திறமையினால் எனக்கு கிடைத்தது), மறுமை நிகழும் எனவும் நான் எண்ணவில்லை, நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும் நிச்சயமாக எனக்கு அவனிடம் சொர்க்கம்தான் உண்டு” என்று நிச்சயமாக அவன் கூறுகிறான். ஆக, நிராகரித்தவர்களுக்கு அவர்கள் செய்ததை நாம் நிச்சயமாக அறிவிப்போம். இன்னும், அவர்களுக்கு கடுமையான தண்டனையை நாம் சுவைக்க வைப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi50. மனிதனைப் பிடித்திருந்த துன்பத்தை நீக்கிய பின்னர், நம் அருளை அவன் சுவைக்கும்படி நாம் செய்தாலோ இது எனக்கு வரவேண்டியதாக இருந்ததே வந்துள்ளது. மறுமை ஏற்படும் என்று நான் நம்பவேயில்லை. அவ்வாறே (மறுமை ஏற்பட்டு) எனது இறைவனிடம் நான் கொண்டு போகப்பட்டாலும், அவனிடத்திலும் நிச்சயமாக எனக்கு நன்மையே கிடைக்கும் என்று கூறுகிறான். ஆனால், எவர்கள் நிராகரிக்கிறார்களோ, அவர்கள் செய்த (தீய) காரியங்களை அந்நாளில் நாம் நிச்சயமாக அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்போம். கடினமான வேதனையை அவர்கள் சுவைக்கும்படியும் நிச்சயமாக நாம் செய்வோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70