وَإِذَآ أَنْعَمْنَا عَلَى ٱلْإِنسَٰنِ أَعْرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ فَذُو دُعَآءٍ عَرِيضٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதன் மீது நாம் அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்தாமல் நம்மை விட்டு) புறக்கணித்து செல்கிறான். (நமக்கு கீழ்ப்படிவதை விட்டு விலகி) தூரமாகி விடுகிறான். அவனுக்கு தீங்கு நிகழ்ந்தால் (நம்மிடம்) மிக அதிகமான பிரார்த்தனை உடையவனாக (-அதிகம் பிரார்த்திப்பவனாக) ஆகிவிடுகிறான்.
Tamil Translation - Omar Sharifமனிதன் மீது நாம் அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்தாமல் நம்மை விட்டு) புறக்கணித்து செல்கிறான். இன்னும், (நமக்கு கீழ்ப்படிவதை விட்டு விலகி) முற்றிலும் தூரமாகி விடுகிறான். அவனுக்கு தீங்கு நிகழ்ந்தால் (நம்மிடம்) மிக அதிகமான பிரார்த்தனை செய்பவனாக ஆகிவிடுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi51. மனிதனுக்கு நாம் (ஒரு) அருள் புரிந்தால், அவன் (நமக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மையும் நம் கட்டளைகளையும்) புறக்கணித்து (நம்மை விட்டும்) விலகி விடுகிறான். அவனை ஒரு தீங்கு தொடர்ந்தாலோ, வெகு அகல-நீளமான பிரார்த்தனை செய்(து அதை நீக்குமாறு நம்மிடம் கோரு)கிறான்.