caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Fussilat அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 61 · 41:5

وَقَالُوا۟ قُلُوبُنَا فِىٓ أَكِنَّةٍ مِّمَّا تَدْعُونَآ إِلَيْهِ وَفِىٓ ءَاذَانِنَا وَقْرٌ وَمِنۢ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَٱعْمَلْ إِنَّنَا عَٰمِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறினார்கள்: நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதில் இருந்து (எங்களைத் தடுக்கக்கூடிய) திரைகளில்தான் எங்கள் உள்ளங்கள் இருக்கின்றன. இன்னும் எங்கள் செவிகளில் செவிட்டுத்தனம் இருக்கிறது. எங்களுக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் (எங்களை உம்மிடமிருந்து தடுக்கக்கூடிய) ஒரு திரையும் இருக்கிறது. ஆகவே, நீர் (விரும்பியதை) செய்வீராக! நிச்சயமாக நாங்கள் (விரும்புவதை நாங்கள்) செய்வோம்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கிறீரோ அதில் இருந்து (எங்களைத் தடுக்கக்கூடிய) திரைகளில்தான் எங்கள் உள்ளங்கள் இருக்கின்றன. இன்னும், எங்கள் செவிகளில் செவிட்டுத்தனம் இருக்கிறது. எங்களுக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் (உமது உபதேசத்தை நாங்கள் செவியுறாமல் எங்களை தடுக்கக்கூடிய) ஒரு திரையும் இருக்கிறது. ஆகவே, நீர் (விரும்பியதை) செய்வீராக! நிச்சயமாக நாங்கள் (விரும்புவதை நாங்கள்) செய்வோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi5. மேலும், ‘‘நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கிறீர்களோ (அதைக் கவனிக்க முடியாதபடி) எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (நீர் கூறுவதைச் செவியுற முடியாதவாறு) எங்கள் செவிகள் செவிடாகி விட்டன. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் திரையிட(ப்பட்டுத் தடுக்க)ப்பட்டு விட்டது. ஆகவே, நீர் (விரும்பியதைச்) செய்து கொண்டிருப்பீராக. நாங்களும் (நாங்கள் விரும்பியதையே) செய்து கொண்டிருப்போம்'' என்றும், (இவ்வேதத்தை நிராகரிப்பவர்கள்) கூறுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70