caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Fussilat அத்தியாயம், வசனம் 6

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 61 · 41:6

قُلْ إِنَّمَآ أَنَا۠ بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَىٰٓ إِلَىَّ أَنَّمَآ إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌ فَٱسْتَقِيمُوٓا۟ إِلَيْهِ وَٱسْتَغْفِرُوهُ وَوَيْلٌ لِّلْمُشْرِكِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே) கூறுவீராக! நான் எல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுகிறது: “உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான் (-படைத்துப் பரிபாலிக்கின்ற உங்கள் இறைவனை மட்டும் வணங்குங்கள்).” ஆகவே, அவன் பக்கமே (உங்களை சேர்த்துவைக்கின்ற நேரான பாதையில்) நீங்கள் நேர்வழி நடங்கள்! அவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! இணைவைப்பவர்களுக்கு நாசம்தான்.
Tamil Translation - Omar Sharif(நபியே) கூறுவீராக! “நான் எல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவது என்னவென்றால்: “(நீங்கள் வணங்கத் தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான்.” ஆகவே, அவன் பக்கம் (உங்களை சேர்த்துவைக்கின்ற நேரான பாதையில்) நீங்கள் நேர்வழி செல்லுங்கள்! இன்னும், அவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! இணைவைப்பவர்களுக்கு நாசம்தான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi6. ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: மெய்யாகவே நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். ஆயினும், உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நில்லுங்கள். அவனிடம் நீங்கள் பாவ மன்னிப்பும் கேளுங்கள். அவனுக்கு இணைவைப்பவர்களுக்குக் கேடுதான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70